ஆஸ்துமா பாதிப்புக்கு எது சிறந்த மருத்துவம்? அலோபதியா? , சித்தாவா?..
நம்மில் பலர் ஒரே பிரச்னைக்கு அலோபதி, சித்தா என இரண்டு சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளலாமா என்றும் கேட்பதுண்டு. இரண்டிலும் என்னென்ன மருந்துகளைக் கொடுக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான், இரண்டையும் எடுப்பதால் ஏதேனும் விளைவுகள் வருமா என்பதைச் சொல்ல முடியும்.ஆஸ்துமா நோயினை பற்றியும் அதின் மருந்துக்களை பற்றியும் விளக்கமளிக்கிறார் டாக்டர் திருப்பதி ,ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படுகிற அலர்ஜி சம்பந்தப்பட்ட நோய். ஒரு நபருக்கு அவரது மரபியலிலேயே அலர்ஜிக்கு உள்ளாகும் தன்மை இருக்கும் பட்சத்தில், அந்த நபர் தூசு,