கண்களை கவரும் கலர் கலரான உணவுகள். உடலுக்கு கேடு...

நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது...’ இப்படி பேக்ரவுண்டில் பாட்டை ஓடவிட்டு, ஒவ்வோர் உணவையும் ருசித்துச் சாப்பிடுவதில் எவ்வளவு சுகம்... தினம் ஓர் உணவு அறிமுக மாகிறது. ஆனால் , அதை விற்பனை செய்பவர்களில் பலரும் பணம் பண்ணுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.


நுகர்வோர்களை எப்படியெல்லாம் கவரலாம் என்பதை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுகிறார்கள். அதனால், பொருளின் தரத்தைவிட, விளம்பரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக் கிறார்கள். அந்த விளம்பரங்களாலும் வீடியோ காட்சிகளாலும் ஈர்க்கப்படும் மக்களும், அந்த உணவுகளின் சுவையை மட்டுமே பார்த்து, அவற்றுக்கு அடிமையாகிறார்கள் இதில் குழந்தை பருவம் முதல் முதியோர் வரை இவ்வகையான உணவுகளை உண்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.


அந்த உணவுத் தயாரிப்பில் சுகாதாரமும், உணவுகளில் ஆரோக்கியமும் இருக்கிறதா என்று சிறிதும் யோசிப்பதில்லை. இப்படி சுகாதாரம் இல்லாமல் தயாரிக்கப்படும் வெளி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் சமீபகாலமாக எல்லா வயதினரிடமும் ஆரோக்கிய பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.மனிதர்களாகிய நாம் விழிப்புடன் இருப்பது கடமையாகவுள்ளது ....