Blogs

தென்கிழக்கு ஆசியாவில் ’சைபர் அடிமையாக’ சிக்கி தவிக்கும் 30000 இந்தியர்கள்;

இணைய மோசடி குற்றங்களை செய்ய கட்டாயப்படுத்தப்படும் 30000 இந்தியர்கள்; தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிக்கி தவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.ஜனவரி 2022 முதல் மே 2024 வரை கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்த 73,138 இந்தியர்களில் 29,466 பேர் இன்னும் திரும்பி வரவில்லை, இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (17,115) 20-39 வயதுக்குட்பட்டவர்கள்; 21,182 பேர் ஆண்கள்;

Read More

சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்; 'சிஸ்கோ' உற்பத்தி மையம் தொடக்கம்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ நிறுவனம் சென்னை  ஸ்ரீபெரும்புதுாரில் புதிய உற்பத்தி மையத்தை நேற்று தொடங்கியது. இந்நிறுவனமானது   தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் உபகரணங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது. சென்னையில் உற்பத்தி மையம் தொடங்கியதன் மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.  தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் கூறுகையில், "சிஸ்கோ தனது தயாரிப்புகளுக்கான முக்கிய சந்தை மற்றும் உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை

Read More

ரயில்வேயில் வேலை வாய்ப்பு; 3,445 பணியிடங்கள் அறிவிப்பு ..

இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 3,445 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. NTPC Vacancyகாலியிடங்களின் எண்ணிக்கை : 3,445காலியிடங்களின் விபரம்Commercial – Ticket Clerk – 2022Accounts Clerk – Typist – 361 Junior Clerk – Typist – 990Trains Clerk –

Read More

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு ..

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மருத்துவ அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித்

Read More

இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் என்பவர் யார்? ஓ.சி.ஐ என்பவர்கள் யார்?

இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருக்கும் பலர் "வெளிநாட்டினர்" என மறுவகைப்படுத்தப்பட்டதாக புகார் அளித்ததை அடுத்து, ஓ.சி.ஐ விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (செப்டம்பர் 28) தெரிவித்துள்ளது.2021 ஆம் ஆண்டு முதல் அரசிதழ் அறிவிப்பின் விதிகள் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், "ஓ.சி.ஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு சமீப காலங்களில் புதிய மாற்றம் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை" என்றும் எக்ஸ் பக்கத்தில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத்

Read More

நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள் அறிவிப்பு .

நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 108 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். Office Attendantகாலியிடங்களின் எண்ணிக்கை: 108கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.10.2024 அன்று 18 வயது

Read More

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு; 499 பணியிடங்கள் அறிவிப்பு . .

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம்

Read More

கன்னியாகுமரி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .

தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய அரிய புவி கனிமங்கள் நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் மினரல்ஸ் லிமிடெட் (Indian Rare Earth Minerals Limited) நிறுவனத்தில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலியிடங்களின் விவரம்Graduate Apprentices Electrical – 2Civil - 1கல்வி தகுதி : இந்த

Read More