மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2023: நீங்கள் அலட்சியமாக கருதக்கூடாத சில முக்கியமான அறிகுறிகள்!!!
ஆரம்பகாலத்தில் நோயை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. எனவே நாம் எதார்த்தமாக தவிர்க்க கூடிய சில அறிகுறிகள் கூட மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உள்ள பெண்களை பெரிய அளவில் பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல் மார்பக புற்றுநோய் எந்த ஒரு நபரையும்