Trending Updates

கோவிஷீல்ட் அதிர்ச்சி செய்தி - கோவிஷீல்டால் அரிதாக பக்க விளைவு ஏற்படலாம்

இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.இதற்கு மன்னிப்பும், உரிய இழப்பீடும் வழங்கக் கோரி ஸ்காட் தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.கடந்தாண்டு மே மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தடுப்பூசியால் பொதுவாக ரத்தம் உறையாது என்று ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் வாதிட்டது. இந்நிலையில், ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம்

Read More

முதல் ATM இயந்திரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என

Read More

வெறும் வயிற்றில் வெந்தைய நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

சிறிய மஞ்சள் நிற விதைகளான வெந்தயம் பெரும்பாலான இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு பொதுவான உணவு பொருளாகும். பெரும்பாலும் உணவுகளை தாளிக்க பயன்படுத்தப்படும் இந்த விதைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களிடையே வெந்தயம் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.ஏராளமான நன்மைகளை கொண்டிருந்தாலும் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நிச்சயமாக ஏராளமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக

Read More

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா..? இந்த ஆவணங்கள் கண்டிப்பாக தேவை

இந்திய குடிமகன்களுக்கான அடையாள அட்டையாகவும், அரசின் திட்டங்களில் பயன்பெறுவதற்கு தேவைப்படும் அடிப்படையான ஆவணமாகவும் இருக்கும் ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIAI) வழங்கி வருகிறது. தகுந்த ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றை மாற்றிக் கொள்வதற்கு இந்த அமைப்பு அனுமதிக்கிறது. எனினும் மொபைல் நம்பர், பாலினம், புகைப்படம் மற்றும் இதர பயோமெட்ரிக் விவரங்களை திருத்த எந்தவித ஆவணங்களும்

Read More

புதிய டாடா சஃபாரி கார் அறிமுகம்.. இதன் மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவின் பிரபல SUV கார்களில் ஒன்றாக இருக்கும் சஃபாரி காரின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.16.19 லட்சமாகும். கூடுதல் வசதி கொண்ட உச்சபட்ச மாடலின் விலை ரூ.25.49 லட்சமாகும். புதுப்பிக்கப்பட்ட டாடா ஹேரியர் காரோடு சஃபாரியின் புதிய மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய சஃபாரியில் பல புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, காரின் உட்புறத்தில் மாற்றங்கள், நீண்ட பட்டியல் கொண்ட சிறப்பம்சங்கள்

Read More

ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ்... பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் நடவடிக்கை!

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டதாக 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஆம்னி

Read More

பாஜகவில் இருந்து திடீரென விலகிய நடிகை கவுதமி..!

ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், 90களில் தவிர்க்கமுடியாத தென்னியந்தியா நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கவுதமி, அக்கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக பணியாற்றினார். அப்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்காக கவுதமி

Read More

3 நாட்களுக்கு ஓலா, ஊபர் கால் டாக்சி இயங்காது... சென்னை வாசிகளே கவனம்....!

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர்  போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நாடு முழுவதும் கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர்.  இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும்

Read More