மருத்துவத் துறையில் இவ்வளவு படிப்புகளா...?
மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசையில் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தீவிரமாகப் படித்து நுழைவுத் தேர்வுகளை எழுதி சீட் பெற்றுப் படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த அனைவருக்கும் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.பெருவாரியான மாணவர்கள் ஒரே பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அந்த பிரிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதை கடினமாக்குகிறது. மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவத்துறையில் மேலும் பல படிப்புகள் உள்ளன.எம்.பி.பி.எஸ்: ஐந்தரை