Trending Updates

சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்; 'சிஸ்கோ' உற்பத்தி மையம் தொடக்கம்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ நிறுவனம் சென்னை  ஸ்ரீபெரும்புதுாரில் புதிய உற்பத்தி மையத்தை நேற்று தொடங்கியது. இந்நிறுவனமானது   தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் உபகரணங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது. சென்னையில் உற்பத்தி மையம் தொடங்கியதன் மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.  தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் கூறுகையில், "சிஸ்கோ தனது தயாரிப்புகளுக்கான முக்கிய சந்தை மற்றும் உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை

Read More

இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் என்பவர் யார்? ஓ.சி.ஐ என்பவர்கள் யார்?

இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருக்கும் பலர் "வெளிநாட்டினர்" என மறுவகைப்படுத்தப்பட்டதாக புகார் அளித்ததை அடுத்து, ஓ.சி.ஐ விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (செப்டம்பர் 28) தெரிவித்துள்ளது.2021 ஆம் ஆண்டு முதல் அரசிதழ் அறிவிப்பின் விதிகள் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், "ஓ.சி.ஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு சமீப காலங்களில் புதிய மாற்றம் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை" என்றும் எக்ஸ் பக்கத்தில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத்

Read More

மக்கள் உடலை அறிவியலுக்கு தானம் செய்ய காரணம் என்ன ?

18 வயதுக்கு மேற்பட்ட எவரும் உடல் தானம் செய்ய சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கலாம். மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதைத் தவிர, புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கும் பல்வேறு நோய்களின் உடலியல் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் அந்த உடல்கள் பயன்படுத்தப்படலாம்.செப்டம்பர் 12-ம் தேதி காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, தனது உடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) தானம் செய்தார். இது இந்தியாவில் உள்ள பலர் எடுக்கும்

Read More

அக்.2-ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்..

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக்டோபர் 2) நிகழ உள்ளது. இது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும். தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 2) இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதே நேரத்தில் தென் அமெரிக்கா, அண்டார்டிகா, வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஹவாய் உள்ளிட்ட பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இது பகுதி

Read More

கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது , "தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர். மு.கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டம் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் 10.01.2022 அன்று 1.47 இலட்சம் குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உயர்

Read More

கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்!

ஆன் லைன் ஷாப்பிங்க் செய்பவர்களுக்கு கொண்ட்டாட்டமாக ,இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. அமேசான் தளம் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்' எனும் தலைப்பின் கீழ் அதன் பண்டிகை கால விற்பனையை அறிவித்துள்ளது. மறுபுறம், ஃபிளிப்கார்ட் 'பிக் பில்லியன் டேஸ் சேல் 2024' எனும் தலைப்பின் கீழ் அதன் பண்டிகை கால விற்பனையை தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும்

Read More

யு.பி.ஐ மோசடிகளை கண்டறிவது எப்படி?

இந்தியாவில் யு.பி.ஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதே நேரம் யு.பி.ஐ மோசடி சம்பவங்களிலும் அதிகரித்து வருவது. பணம் பெற யு.பி.ஐ பின் நம்பர் தேவையில்லை இந்த வகையான மோசடி சம்பவம் குறிப்பாக விளம்பரம், பரிசுத் தொகை கிடைத்துள்ளது என்று கூறப்பட்டு உங்களுக்கு அனுப்பபடும். அதாவது போன் பே, பேடிஎம் செயலியில்  உங்களுக்கு குலுக்கல் முறையில் பல ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.மேலும் இந்த பணத்தைப் பெற நீங்கள்

Read More

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு எப்படி மாற்றலாம்!?

இந்தியாவில் வட மாநிலங்களில் அதிக அளவு மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். மற்றும் தொலைதூர பயணங்களுக்கு பலரும்  ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். இதற்கு காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில்,   சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்ற ரயிலில் வசதி உள்ளது. இதற்கு முதலில் மிக முக்கியமாக

Read More