காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2026/09/17889587193196.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண். 26, புத்தேரி தெரு, கைலாசநாதர் கோவில் பின்புறம், காஞ்சிபுரம் - 631502

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026