நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இயங்கி வரும் ராணுவ பொது பள்ளியில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தொகுப்பூதிய நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Post Graduate Teachers (PGT)
Physical Education
கல்வித் தகுதி:
சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும்.
Trained Graduate Teacher (TGT)
- Hindi
- Social Science
- Mathematics
- English
கல்வித் தகுதி:
சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும்.
Primary Teacher (PRT)
- Hindi
- Mathematics
- Art & Craft
- PTI
- Wellness & Beauty
- All Subjects
கல்வித் தகுதி:
சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
Kindergarten Teacher (KGT)
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma in Nursery Teacher Education படித்திருக்க வேண்டும்.
Female Nursing Assistant
கல்வித் தகுதி:
Diploma in Nursing Assistant படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.apswellington-nilgiris.edu.in/career என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Principal, Army Public School Wellington, Tdk Pillai Rd, Near Defence Services Staff College, Wellington, Tamil Nadu 643231
விண்ணப்பக்க கட்டணம்: ரூ. 250
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2026