மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
ஈப்பு ஓட்டுநர்
(உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ரூ. 19,500 – 71,900
பதிவறை எழுத்தர்
(அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
அலுவலக உதவியாளர்
(திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,700 – 58,100
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.