யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 225 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 

Administrative Officer – Generalists

காலியிடங்களின் எண்ணிக்கை: 200

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

Administrative Officer – Hindi Officers

காலியிடங்களின் எண்ணிக்கை: 200

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Hindi முடித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 30.06.2026 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: ரூ. 1,10,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsreg.ibps.in/uiicljul26/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.09.2026

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.250.