சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

பதிவறை எழுத்தர் (Record Clerk)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,900 – 58,600

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2026/09/17882422881113.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், எஸ்.புதூர் – 630410, சிவகங்கை மாவட்டம்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026