செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Assistant Cum Bench Clerk 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி;

இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 25,000

Junior Assistant Cum Bench Clerk 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி;

இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 20,000

Office Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி;

இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2026/09/17888499359024.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06, தரைத் தளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு - 603111

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2026