அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் கட்டிடவியல் பொறியியல் துறையில் (DEPARTMENT OF CIVIL ENGINEERING) ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Junior Research Fellow (JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் M.E./ M.Tech in Engineering/ Technology or M.Sc. (Civil Engineering / Geoinformatics Engineering / Geoinformatics / Remote Sensing / Geomatics / Geology / Applied Geology / Geography / Computer Science Engineering) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 37,000 - 42,000 + 10% HRA
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/02%20Adverisement%20for%20JRF.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Dr. J. Colins Johnny, Assistant Professor, Department of Civil Engineering, University College of Engineering Nagercoil, Konam Nagercoil - 600 004
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2026