தமிழக அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கட்டாயம் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.07.2026 அன்று 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2026/09/17884179192756.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மண்டல புள்ளிஇயல் இணை இயக்குநர், மண்டல புள்ளிஇயல் அலுவலகம், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, பழைய கட்டிடம், தரைத்தளம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600006 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2026