கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக நுண்ணுயிரியலாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Microbiologist - Culture & DST Lab

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.D., Microbiology அல்லது Ph.D., Medical Microbiology/ Applied Microbiology / General Microbiology அல்லது M.Sc., Medical Microbiology/ Applied Microbiology / General Microbiology படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 44,000

Driver (Mobile X Ray van)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட தேர்வுக் குழு, மாவட்ட காசநோய் மைய அலுவலகம், எண். 219, மாவட்ட சுகாதார வளாகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 641018

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.09.2026