ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 10,592

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2026/08/17876610176500.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2026