தேனி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் செயல்படும் தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Counsellor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் Graduate in Social Work /Sociology/ Psychology/ Public Health/ Counselling படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,536
Social Workers
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,536
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://theni.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
District Child Protection Officer District Child Protection Office, District Block Level Officer Building - II Collectorate Campus, District Employment Office Upstairs Theni -625 531
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.09.2026