கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.Sc. Agriculture பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். 

வயதுத் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மேலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாயனூர் காவல் நிலையம் அருகில், மாயனூர் (அஞ்சல்), கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026