சவுத் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Junior Officer (BUSINESS PROMOTION OFFICER)

காலியிடங்களின் எண்ணிக்கை:

தற்போதைய அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி:

31.07.2026 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

ஆண்டுக்கு ரூ. 7.85 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://recruit.southindianbank.com/RDC/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026

விண்ணப்பக் கட்டணம்: இல்லை