இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

LOCAL BANK OFFICERS

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.08.2026 அன்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 48,480 – 85,920

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு, வட்டார மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் வட்டார மொழித் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. இறுதி பணி நியமனத்திற்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கணினி வழித் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/ வங்கி சார்ந்த 140 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  www.iob.bank.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 850. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 175

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2026