திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Audiologist & Speech Therapists

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

BASLP படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 32,000

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelors / Master’s Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 27,000

Audio metrician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

certificate course in audiometry or Diploma in Hearing Language and Speech (DHLS) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 20,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.Sc Radiography படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000

OT Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

OT Technician Course படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,000

Mid-Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி:

Diploma in GNM/B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

Multi-Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

ANM

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி:

ANM படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Genetic Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor’s Degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

Siddha Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

B.S.M.S படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 40,000

Unani Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.U.M.S படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 40,000

Dispenser

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி:

Diploma in Integrated pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி:

Diploma in Nursing therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000

Ayush Multipurpose Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

District Quality Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science Graduates படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 44,000

Programme Cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 20,000

Senior DOTs-Plus & TBHIV Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 29,000

Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,000

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 63,000

ICTC- Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Graduate degree holder in Psychology/ Social Work/ Sociology/ Anthropology/ Human development/ Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 21,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2026/08/17863557892158.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தின பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மீனாட்சிநாயக்கன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் - 624002

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2026