சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Technician Grade - A
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
Electronics / Instrumentation பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.niot.res.in/recruitment_details.php என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.09.2026