திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறைக்கு உட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

சுகாதார ஆய்வாளர் (Multipurpose Health Worker (Health Inspector Gr.II))

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதி:

12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health worker (male) /inspector/ Sanitary inspector கோர்ஸ் படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 17,500

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2026/07/17847190957897.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2026