10th Public Exam Result : வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஈஸியாக பார்க்கலாம்..

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணைய தளங்களில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.