இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் உதவியாளர், கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 242 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 130

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 25,500

JUNIOR PERSONAL ASSISTANTS 

காலியிடங்களின் எண்ணிக்கை: 82

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 25,500

UPPER DIVISION CLERKS

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 25,500

STENOGRAPHERS

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 25,500

வயதுத் தகுதி:

16.08.2026 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.isro.gov.in/ICRB_Recruitment11.html என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 100, மற்றும் செயலாக்கக் கட்டணம் ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2026