திருச்சி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கட்டுப்பாட்டு அலகில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
வழக்குப் பணியாளர் (CASEWORKER)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் மற்றும் நல்ல முறையிலான தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2026/07/17851473098299.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, N.E 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2026