தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசகர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Counsellor/ Psychologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 27,000

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 11,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தாங்கள்  தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2026