தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Medical Lab Technician (Pathology)
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பில் உயிரியியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 9,600 – 10,560
Medical Lab Technician (Radiology)
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பில் உயிரியியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 9,600 – 10,560
Conveyor Belt Vulcaniser
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 9,600 – 10,560
வயது தகுதி:
31.02.2026 அன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.nlcindia.in/website/en/careers/jobs/trainees_apprentices.html என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.08.2026