தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Relationship Manager
கல்வித் தகுதி:
இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி:
30.06.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.08.2026