சென்னை ஆவடி கவச வாகனங்கள் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஆவடி கவச வாகனங்கள் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 1213 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Junior Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1005
கல்வித் தகுதி: Electrician, Electronic Mechanic, Electroplater, Fitter (General), Forger & Heat Treater, Foundrymen, Machinist, Mechanic Machine Tool Maintenance, OMHE at Raw Material Handling Plant, Painter General, Quality Assurance Assistant, Rigger and Welder பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25050 + IDA
Junior Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 165
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 34500 + IDA
Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 45000 + IDA
Deputy Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 55500 + IDA
Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Chartered Accountant படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 129000 + IDA
Addl. General Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இராணுவ சேவையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 108000 + IDA
Deputy General Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 87000 + IDA
Senior Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 76500 + IDA
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://avnl.co.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026