செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காவலாளி பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
காவலாளி
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி;
இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தினசரி ரூ. 548
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2026/07/17852154678281.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06, தரைத் தளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு - 603111
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2026