எய்ம்ஸ் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஆகியவற்றில் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நார்செட் (NORCET) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2218 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Nursing Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2218
கல்வித் தகுதி:
Diploma in General Nursing Midwifery அல்லது B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 9,300 – 34,800
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் – முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://aiimsexams.ac.in/advertisement/6a6350f7e5a81c4267f4ff04 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 3000, எஸ்.சி, எஸ்.டி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ. 2400, மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2026