இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் சாஃப்ட்வேர் டெஸ்ட் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Software Test Engineer/ Automation Tester
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி:
B.E / B.Tech / MCA / M.Sc (Computer Science) படித்திருக்க வேண்டும். மேலும் 2 – 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்:
ரூ. 25,000 – 40,000 (தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2026