தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2026 - 2027 அறிவிப்பு
தமிழக இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தனது 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வுக்கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்து மக்கள் பணியாற்றத் துடிக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டுத் திட்டத்தின்படி, முதலாவதாக சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம் - Sub-Inspector Technical) பணிக்கான அறிவிப்பு வரும் 2027 பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் (ECE) துறையில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ (Diploma) சான்றிதழ் அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, கலை மற்றும் இசைத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்காக இசைக்குழு காவலர் (Band Police Constable) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2027 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சியுடன், குறிப்பிட்ட இசைக்கருவிகளை இயக்குவதில் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.