ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 6557 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Technician Grade - I (Signal)

காலியிடங்களின் எண்ணிக்கை: 323

கல்வித் தகுதி:

B.Sc Physics/ Electronics/ Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். அல்லது இதே பிரிவுகளில் Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

01.07.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

ரூ. 29,200 (அடிப்படை சம்பளம்)

Technician Grade - III

காலியிடங்களின் எண்ணிக்கை: 6234

கல்வித் தகுதி:

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.07.2026 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900 (அடிப்படை சம்பளம்)

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கிரேடு வாரியாக தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.07.2026

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250