தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Audiologist and Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelor’s degree in speech and Language pathology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Therapeutic Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரரர்கள் Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 13,000

மாவட்ட தர ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science மற்றும் Masters in Hospital Administration/Public Health/ Health Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 44,000

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி:

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

நூலகர் மற்றும் புள்ளியியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.Sc/ B.Com/ B.Sc with degree in library and information science  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Bachelors/Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Dental Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Dental technician கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 9,500

Medical Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

MBBS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 63,000

Van Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,000

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.Com graduate (or) B.A corporate / BCS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,000

Hospital worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி:

விண்ணப்பத்தாரர்கள் Diploma Course in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 8,000 – 17,000

MPHW (Male) Health Inspector Gr-II

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி:

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து, MultiPurpose Health Worker (Male) / Health Inspector /Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500 

ANM

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Multipurpose Health Worker (F) training course/Auxiliary nurse Midwifery training course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,500

Audio Metric Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பத்தாரர்கள் Diploma in training young deaf and hearing handicapped படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 20,000

Operation theatre technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி:

Certificate / Diploma Course in Theatre Technician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 6,000

Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Certificate of Nursing Assistant Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 6,000 

வயது வரம்பு தளர்வு :

தமிழக அரசு விதிகளின் படி பி.சி, எம்.பி.சி, டி.என்.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2026/06/17809143964210.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி - 628002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.06.2026