தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலை வாய்ப்பு !! தேர்வு இல்லை !!!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 400

  • Civil Engineering – 360
  • Electrical and Electronics Engineering – 28
  • Architecture - 12

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை : 160

  • Civil Engineering – 150
  • Electrical and Electronics Engineering – 5
  • Architecture - 5

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 8,000

Non – Engineering Graduates

காலியிடங்கள் எண்ணிக்கை - 200

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 9,000

வயது தகுதி :

18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.06.2026