புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

Project Nurse - II 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் General Nursing and Midwife (GNM) course or B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

20.06.2026 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 20,000 + 20% HRA 

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20PN%20II.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : mwlcproject@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.06.2026