திருநெல்வேலியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு
திருநெல்வேலியில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Senior Scientists / Head KVK
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 37,400 – 67,000
Subject Matter Specialist (Horticulture)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Master’s Degree in the Horticulture படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,600 – 39,100
Subject Matter Specialist (Animal Science)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s Degree in Veterinary science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,600 – 39,100
Programme Assistant (Lab technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree in Agriculture படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 9,300 – 34,800
வயது வரம்பு தளர்வு :
மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://rvskvk.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Chairman, ICAR – RVS - KRISHI VIGYAN KENDRA, Urmelalagian Village, Kadayanallur Taluk, Tenkasi District – 627 852 Phone – 9443962433
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.07.2026