திருவாரூர் மாவட்ட மத்திய பல்கலை கழகத்தில் வேலை வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Consultant (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelor’s Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 20 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 65,000

Junior Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

Bachelor’s Degree of Engineering in Civil Engineering படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Engineering in the Civil Engineering படித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,400

Technical Assistant (Electrical) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Bachelor’s Degree of Engineering in (Electrical Engineering) படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Engineering in the (Electrical Engineering) படித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 29,200

Technical Assistant (HVAC)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelor’s Degree of Engineering in (Mechanical Engineering) படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Engineering in the (Mechanical Engineering/ Air Conditioner and Refrigeration) படித்து 3 ஆண்டுகள் அதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 29,200

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cutn.ac.in/wp-content/uploads/2026/06/Application-Form-for-Temporary-Engagement-position-of-Consultant-Civil-Junior-Engineer-Civil-Technical-Assistant-Electrical-and-TEchnical-Assistant-HVAC_12062026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Joint Registrar, Recruitment Cell, Central University of Tamilnadu, Thiruvarur, Tamil Nadu - 610 005

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.06.2026