கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி, கூடன்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 255 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Stipendiary Trainee/ Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 255

  1. Plant Operator - 136
  2. Electronics Mechanic - 15
  3. Instrumentation Mechanic - 15
  4. Electrician - 47
  5. Fitter - 30
  6. Turner - 5
  7. Machinist - 5
  8. Welder - 2

கல்வி தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். Plant Operator பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 34,720

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.npcilcareers.co.in என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.06.2026