தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் 3 நாள் மொபைல் சர்வீஸ் பயிற்சி வழங்குகிறது ,
சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) சார்பில் ஜூன் 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு இலவச மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற பின் அதற்கான அரசு சான்றிதழும், தொழில் தொடங்க மானியக் கடனுதவி ஆலோசனைகளும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காகச் சென்னையில் 3 நாட்களுக்கு அதிநவீன மொபைல் போன் சிப் லெவல் பழுது நீக்கும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் EDII நிறுவனம் நடத்தும் இந்த வகுப்பில் பங்கேற்க 10-ஆம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களுக்குச் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில் 3 நாட்கள் கொண்ட சிறப்பு "மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி" முகாம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் வரும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) இந்தத் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
மொபைல் போன் தயாரிப்புத் துறையின் தற்போதைய தொழில்நுட்பத் தரத்திற்கு ஏற்ப, பங்கேற்பாளர்களுக்கு சிப் லெவல் சர்வீசிங் (Chip Level Service) மற்றும் ஹார்ட்வேர் (hard ware) பழுதுகளைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான செயல்முறை விளக்கங்கள் இதில் கற்றுத்தரப்படும்.
மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில், முதல் நாளில் ஸ்மார்ட்போன்களின் அடிப்படை பாகங்கள், டிஸ்ப்ளே, பேட்டரி, ஸ்பீக்கர் மற்றும் சார்ஜிங் போர்டுகளில் ஏற்படும் பழுதுகளை நீக்கும் முறைகளும்; இரண்டாம் நாளில் மல்டிமீட்டர் பயன்பாடு, சோல்டரிங் நுட்பங்கள், மதர்போர்டு மின்னழுத்தப் பிரிவுகள் மற்றும் ஆன் ஆகாத மொபைல்களைச் சரிசெய்யும் முறைகளும் கற்றுத்தரப்படும். இறுதி நாளான மூன்றாம் நாளில், சாஃப்ட்வேர் அன்லாக் (FRP Unlock) கருவிகள், எல்சிடி/ஓஎல்இடி டிஸ்ப்ளே பழுதுகள், நெட்வொர்க் சிக்கல்களைக் கையாளுதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தொழில் கடனுதவி மற்றும் மானிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.