திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல்/ உளவியல்/ சட்டம் போன்றவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,800

தொழில்நுட்ப பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelors degree with a Diploma in computers/ IT பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 20,000

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

எழுதப் படிக்க மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2026/06/17811796234542.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், திருவள்ளூர் - 602001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2026