திருச்சி என்.ஐ.டி.,யில் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர் பணி அறிவிப்பு
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகத்தில் இயங்கி வரும் மழலையர் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Headmistress
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor's Degree மற்றும் B.Ed. Degree படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
Teacher
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor's Degree மற்றும் Diploma/ Degree in Early Childhood Education (ECE), Nursery Teacher Training (NTT), Montessori Training, D.El.Ed., or B.Ed. படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.nitt.edu/home/other/jobs/advt-headmistress-teacher.pdf விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி :
The Dean (Institutional Development & Alumni Relations), National Institute of Technology Tiruchirappalli, Tiruchirappalli – 620015, Tamil Nadu
மின்னஞ்சல் முகவரி : idoffice@nitt.edu
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.06.2026