கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assistant cum Data Entry Operator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பட்டயப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
01.06.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2026/06/17809903166975.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 100, 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி - 635115
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2026