அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகமான கட்டிட வடிவமைப்பியல் மற்றும் திட்டமிடல் கல்லூரியின் திட்டமிடல் துறையில் (DEPARTMENT OF PLANNING) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Associate – II
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Master’s Degree in Planning படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 50,000 – 60,000
Project Associate – I
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Bachelor’s Degree in Planning படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000 – 15,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment_PA_TA_SAP.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Head of the Department, Department of Planning, Sap Campus, Anna University, Chennai – 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.06.2026