சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

பாதுகாப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தை வளர்ச்சி/ மனித உரிமைகள்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய வள நிர்வாகம் ஆகியவற்றில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 27,804

புறத்தொடர்பு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் : ரூ. 11,574

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2026/05/17793436598476.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 131, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை - 630562

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.06.2026