திருச்சி பாரதிதாசன் பல்கலை. வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
M.Sc. in Geology / Applied Geology / Marine Geology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடத்திற்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.bdu.ac.in/docs/employment/PA-CMRG-GEOLOGY-1-12062026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
Dr.R.Sakthivel, Principal Investigator – CMRG Project, Professor and Head, Department of Geology, Bharathidasan University, Khajamalai Campus, Near Anna Stadium, Tiruchirappalli - 620023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.06.2026