வேலூர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை வேலை வாய்ப்பு!!!
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Graduate in Social Work / Sociology / Psychology / Public Health /Counselling படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி :
01.01.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
மேற்பார்வையாளர் (Supervisor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B.A in Social Work / Computer Sciences / Information Technology / Community Sociology / Social Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி :
01.01.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2026/05/17800539027652.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலா மாளிகை எதிரில், அண்ணா சாலை, வேலூர் - 632001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.06.2026